பந்தா காட்டி பல்பு வாங்கிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

சினிமா என்றாலே எதார்த்தம் மீறிய ஒன்று தான். இதில், தெலுங்கு சினிமாவில், சற்று அதிகமாகவே எதார்த்தம் மீறப்படும். ஒரு ஆள், 100 பேரை அடிப்பது, ரயிலை பார்வையாலே நிறுத்துவது போன்ற ஸ்டன்ட் காட்சிகள் இடம்பெறுவது, தெலுங்கில் சாதாரணம்.

இவ்வாறு இருக்க, தெலுங்கு திரைப்படங்களில் வருவதைப் போன்றே, நிஜ வாழ்க்கையில் பவன் கல்யாண் ஒரு காரியத்தை செய்துள்ளார். அதாவது, காரின் மேற்கூரையில் அமர்ந்துக் கொண்டு பவன் கல்யாண் பயணித்துள்ளார்.

இதுகுறித்து, சிவக்குமார் என்ற நபர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.