“எழுத்துப்பூர்வ ஆதாரம் வேண்டும்” – BCCI-யிடம் கேட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூலம் நடத்தப்படும் சேம்பியன்ஸ் டிராபி, அடுத்த ஆண்டு நடத்தப்பட உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் முற்றிலுமாக பாகிஸ்தான் நாட்டில் தான் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாதுகாப்பு பிரச்சனை காரணமாகவும், இருநாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருப்பதாலும், பாகிஸ்தான் நாட்டில் நடக்கும் சேம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா கலந்துக் கொள்ளாது என்றும், இந்திய அணிக்கான போட்டியை மட்டும், பக்கத்து நாடான ஸ்ரீலங்காவில் நடத்த வேண்டும் என்றும், தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக, தங்களது பார்வையை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதாவது, “பாகிஸ்தான் நாட்டில் பயணம் செல்வதற்கு, இந்திய அரசு அனுமதி மறுத்ததற்கான எழுத்துப்பூர்வ ஆதாரத்தை, ICC-யிடம் BCCI வழங்க வேண்டும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு செல்லும் தங்களது திட்டம் குறித்து, 5-ல் இருந்து 6 மாதங்களுக்கு முன்பாகவே, ஐ.சி.சி-யிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

RELATED ARTICLES

Recent News