இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி. இந்த பண்டிகையை வயது வித்தியாசம் இன்றி, அனைத்து தரப்பு மக்களும், தங்களது முகங்களில் வண்ணப் பொடிகளை பூசி, கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
அந்த வகையில், 2024-ஆம் ஆண்டுக்கான ஹோலி பண்டிகை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதற்கிடையே, இந்த பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுகிறேன் என்ற பெயரில், இளம்பெண்ணும், இளைஞர் ஒருவரும் உடலை பஞ்சராக்கிக் கொண்டுள்ளனர்.
அதாவது, டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியை சேர்ந்த இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களை ஏற்றிக் கொண்டு, சாகசம் செய்துள்ளார்.
அப்போது, எதிர்பாரா விதமாக, பைக்கின் மீது ஏறி நின்றுக் கொண்டிருந்த பெண், சாலையில் குப்புறடித்து, கீழே விழுந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலானதைத் தொடர்ந்து, பலரது கண்டனங்களை பெற்று வருகிறது.
மேலும், இந்த வீடியோ, நொய்டா போக்குவரத்துறை காவல் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அவர்கள் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.