விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமணம் மண்டபம் ஒன்றில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், 24-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், கே.பாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் முடிந்திருப்பதாலும், அவரது வயது 72 ஆக இருப்பதாலும், கட்சி பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், திமுக தலைமையிலான ஆட்சியை கண்டித்து கே.பாலகிருஷ்ணன் பேசியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, அதற்கு பதிலடியை கொடுத்திருந்தது. இந்த சூழலில், கே.பாலகிருஷ்ணன் மாநில செயாலளர் பதவியில் இருந்து விலகியிருப்பது, அரசியல் வட்டாரங்களில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.