நாடு முழுவதும் சுதந்திர நாள் விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி இன்று காலை கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையின்போது மணிப்பூர் குறித்து பேசியதாவது:
“மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. தற்போது அங்கு அமைதி திரும்பி வருகின்றது. அமைதியால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகின்றன.
மணிப்பூர் வன்முறையில் பலர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுடன் துணை நிற்கின்றது.