நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கு 20-க்கும் அதிகமான இடங்கள் பின்தங்கியுள்ளது.
இதனால் பாஜக தனிப் பெரும்பான்மை பெறவில்லை. கூட்டணி கட்சிகளை நம்பியே ஆட்சி அமைக்கும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலை பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், நேற்று டெல்லியில், கருணாநிதியின் நீண்ட கால நண்பரான சந்திரபாபு நாயுடுவைச் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து உள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் அடிக்கடி கூட்டணி மாறிய வரலாறு உள்ளது.