இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும், இணைந்து, ரௌடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர்.
சில சமயங்களில், வித்தியாசமான படைப்புகளையும், தங்கள் நிறுவனத்தின் கீழ் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பு, அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த ராக்கி திரைப்படத்தையும், அந்த நிறுவனம் தான் வெளியிட்டிருந்தது. அந்த வகையில், தற்போது கூழாங்கல் என்ற திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த திரைப்படம், தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.
குறிப்பாக, இந்தியா சார்பில், ஆஸ்கர் விருது விழாவிற்கும் தேர்வு செய்யப்பட்டு, அனுப்பப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தங்களது அனுபவங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.