பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதற்காகவே சென்னை மாநகரில் பல இடங்களில் பொது கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் பலர் அதனை முறையாக கடைபிடிப்பதில்லை. எனவே மாநகராட்சி சட்டப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கான உத்தரவை கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பிறப்பித்துள்ளார். பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கான அபராத தொகை ரூ.50 என்பது குறைவானதாகவே இருந்த போதிலும் அதனை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் பொது இடங்களில் சுகாதாரத்தை பேண முடியும் என கூறியுள்ளார்.
சென்னை மாநகரின் சுகாதாரத்தை பேணும் வகையில் சிறுநீர் கழிப்பவர்களிடம் ரூ.50 அபராத தொகையை கண்டிப்புடன் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.