தமிழ்நாடு அரசு கொண்டு வரும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருகிறார். மேலும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பேசி வருகிறார். இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
தமிழக அரசின் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வரும் விவகாரம் தொடர்ந்து பேசு பொருளாகி வரும் நிலையில் அது குறித்து பேசியுள்ளார்.
“ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாக பொருள். அரசியல் அமைப்பின் படி அரசியல் அமைப்பை பாதுக்காப்பதே ஆளுநரின் கடமை” என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில் கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என பேசியுள்ளார்.