45 வயது முதல் 60 வயது வரை திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களுக்கு மாதம் ரூ.2750 வழங்கப்படும் என ஹரியானா மாநில முதல்வர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
இவர்களது ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சம் பேர் பயனடைவார்கள் என முதல்வர் லால் கட்டார் கூறியுள்ளார். அதேபோல் முதியோர்களுக்கான ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்வர் கட்டார் அறிவித்துள்ளார். அடுத்த 6 மாதங்களுக்கு இது பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திருமணம் ஆகாதவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.