சமூகநீதி பெயரால் மக்களை ஏமாற்றுகிறார்கள்… திமுகவை வறுத்தெடுத்த டிடிவி தினகரன்..!

மதுரை அரசடி பகுதியில் அமமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கிறிஸ்துவ அமைப்புகள் கலந்து கொண்டனர். இதையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய அவர்கள், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய டிடிவி. தினகரன் தமிழ், சமூகநீதி, சமத்துவம், என்ற பெயரால் தனது குடும்பத்தாரே ஆட்சியில் இருக்கவேண்டும் என்ற நோக்கில் தாத்தா முதல் கொள்ளுபேரன் வரை பிரிவினையை உருவாக்கிவருகின்றனர் என்றார். தேர்தல் நேரத்தில் மட்டும் சிறுபான்மை, பெருபான்மை என்று பேசுவார்கள் ஆனால் போலியானவர்கள் நம்பாதீர்கள் என்று திமுகவை ஒறுமையில் சாடினார்.