நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோழி திருட வந்ததாக சந்தேகம்: ஒருவர் அடித்து கொலை!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி மற்றும் இருசக்கர வாகனங்களில் ஊசி பாசி மற்றும் பொம்மை பொருட்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை இக்குழுவைச் சேர்ந்த செங்குட்டன் மற்றும் குமார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தாந்தோணி என்ற கிராமத்துக்கு வியாபாரத்துக்காக சென்றுள்ளனர்.

 இந்நிலையில் தாந்தோணி பகுதியை சேர்ந்த சிலர் இவர்கள் கோழி திருடுவதற்காக வந்துள்ளார் எனக் கூறி இருவரின் கைகளை பின்புறமாக கட்டி வைத்து இருவரையும் சரமாரியாக மரக் கட்டைகளால் தாக்கியுள்ளனர்.

 இதில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த காயங்களுடன் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து செல்ல முற்பட்டபோது பலத்த காயம் காரணமாக இவர்களால் அங்கிருந்து செல்ல முடியவில்லை தவித்துள்ளனர்.

இதில் செங்குட்டன் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார் இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் செங்குட்டான் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர் மேலும் குமாரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இதை தொடர்ந்து அங்கு வந்த அவரது உறவினர்கள் உடுமலை அரசு மருத்துவமனையை முற்றுயிட்ட செங்குட்டனின் உறவினர்களான நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் நரிக்குறவர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை உறுதியாக கைது செய்து விடுவோம் என உத்தரவாதம் அளித்தனர்.

ஊசி, பாசிகள் மற்றும் பொம்மைகள் என வியாபாரத்துக்காக சென்ற நரிக்குறவர் இன அப்பாவி மக்களை கோழிகள் திருட வந்தவர்கள் என கூறி தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News