மக்களே உஷாா்..! அழகு சிகிச்சையால் உயிாிழந்த பிரேசில் மாடல்..!

பிரேசில் நாட்டின் 29 வயதாகும் லுவானா ஆன்ட்ரே பிரேசில் தேசத்தின் பிரபல மாடல்களில் ஒருவர். மாடல்களுக்கு முக்கியமே அவர்களின் வாளிபமான உடற்கட்டு என்பதால், அதனை பேணிப் பராமரித்துக்கொள்ள லுவானாவும் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டிருந்தாா்.

மேலும் ,அழகு பராமரிப்புக்கு வழக்கமான உடற்பயிற்சி, உணவூட்டம் மட்டுமன்றி அறுவை சிகிச்சையையும் லுவானா நம்பியிருந்தார். இதற்காக அண்மையில் ’லிப்போசக்‌ஷன்’ எனப்படும் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். வழக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு உரிய ரிஸ்க், அழகு சிகிச்சையில் சற்று அதிகம் என்ற போதும் துணிந்து இறங்கினார்.

பிரேசிலின் பிரபல தனியார் மருத்துவமனையில், லுவானா காலில் உள்ள கொழுப்பினை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டது. பின்னா் இச்சிகிச்சைகளில் ஏதோ குழறுபடி நிகழ்ந்ததாக தொிகிறது. இதனால் அவருக்கு அடுத்தடுத்து 4 முறை மாரடைப்பு நேரிட்டதில், லுவானா உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனபோதும் சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே அவர் உயிாிழந்தாா். அழகு பராமரிப்புக்காக பிரேசிலை தாண்டி பலரும் , சமூக ஊடகங்கள் வாயிலாக லுவானாவுக்கு அபிமானிகள் அதிகம். அவர்கள் மத்தியில் லுவானாவின் அகால மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடவே, அழகு சிகிச்சைக்குள் ஒளிந்திருக்கும் அபாயத்தையும் லுவானாவின் மரணம் உணர்த்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News