செருப்புகளை திருடிய வடக்கன்ஸ்…தட்டி தூக்கிய போலீஸ்

தாம்பரம் அருகே காலணிகளை திருடி பல்லாவரம் சந்தையில் விற்ற வடமாநிலத்தவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 300 ஜோடி செருப்புகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் காலணிகள் திருடபடுவதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து குடியிருப்பு பகுதிகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அரை நிர்வாணத்தில் படிக்கட்டுகளில் தவிழ்ந்து வரும் நபர் ஒருவர் வீட்டின் வெளியே உள்ள காலணிகளை திருடியது தெரியவந்தது.

இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கேம்ப்ரோடு பகுதியில் உள்ள கேக் கடையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார், ரோஹித் குமார் மற்றும் உடந்தையாக இருந்த அருள் எப்ரின் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரனையில் காலணிகளை திருடி பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்ததை ஒப்புகொண்டனர். இதை அடுத்து அவர்களிடமிருந்து 300 ஜோடி காலணிகளை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News