ஐஸ்லாந்தின் 24 மணி நேரத்தில் 1400 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வட அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் 33 சீறும் எரிமலைகள் உள்ளன. எரிமலைகள் வெடிப்பதற்கு முன் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
24 மணி நேரத்தில் 1400 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். தொடர் நிலநடுக்கத்தால் எரிமலை வெடிப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி ஐஸ்லாந்து அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.