ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிக்காமல் வெறுமனே போக்கு காட்டி வருவதையும், பிரிவினையைத் தூண்டும் அரசியலையும் மக்கள் அறவே வெறுக்கின்றனர் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
அதாவது, காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவானதை பிரதமர் நரேந்திர மோடியால் பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிக்காமல் வெறுமனே போக்கு காட்டி வருவதையும், பிரிவினையைத் தூண்டும் அரசியலையும் மக்கள் அறவே வெறுக்கின்றனர்.
தற்போது தேவையானது, நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பது மட்டுமல்லாது, வலுப்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது என ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.