இந்தியாவின் 7 வட கிழக்கு மாநிலங்களில் மேகலயாவும் ஒன்று. இங்கு நேற்றிரவு முதல் இன்று நண்பகல் வரை தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு(டிச.23) 8 மணிக்கு சற்று முன்பாக மேகாலயாவின் கிழக்கு காரோ வனப்பகுதிகளில் நிலநடுக்கம் நேரிட்டது. நிலத்தடியில் சுமார் 5 கிமீ ஆழத்தில் ஏற்ப்பட்டதாக சொல்லப்படும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேலில் 3.5 என்பதாக பதிவானது.
தொடர்ந்து இன்றைய தினம் நண்பகலில் 1 மணிக்கு சற்று முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. தூப்ரி பகுதியில் விளைந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் ஸ்கேலில் 3.1 என்பதாக பதிவானது. நிலத்தடியில் சுமார் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் விளைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த இரண்டுக்கும் இடையே பல சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தொிகிறது.
இந்த சிறிய நிலநடுக்கம் பெரிய நிலநடுக்கத்தின் தொடக்கமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனா்.இதனால், சனி இரவு, ஞாயிறு பகலின் தொடர்ச்சியாக மேகாலயாவில் மேலும் நிலநடுக்கம் நேரிட வாய்ப்பாகும் என்ற அச்சத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர். இதனால் நிலநடுக்கம் வாய்ப்புள்ள பகுதிகளின் வாழ்மக்கள் பலரும் இன்றிரவு தூக்கம் தொலைத்து, திறந்த இடங்களில் தங்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன.