அரசு அலுவலகத்தில் அலைக்கழிப்பு.. பொங்கியெழுந்த பொதுமக்கள்..

நத்தம் அருகே, ஆதார் அட்டையை திருத்தம் செய்வதற்கு அலைக்கழிக்கப்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள அரசு இ-சேவை மையத்தில், கணினி பழுதாகியுள்ளது. இதன்காரணமாக, மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேவைகள், கடந்த ஒரு வாரமாக பாதிப்படைந்துள்ளன.

இந்நிலையில், இன்று இ-சேவை மையத்திற்கு வந்த பொதுமக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சமரசம் பேசியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பொதுமக்களின் இந்த போராட்டத்தால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

RELATED ARTICLES

Recent News