காரைக்குடி அருகே, கனமழையின் காரணமாக சேதமடைந்த தரைபாலத்தை, சரி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கிராமங்களுக்கு, தரைபாலம் வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் பெய்த கனமழையால், அந்த தரைப்பாலம் சேதமடைந்துள்ளது.
இதன்காரணமாக, அவ்வழியாக இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், தற்போது வேறுவழிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவர்களும், பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளனர். எனவே, இந்த தரைப்பாலத்தை சரிசெய்து தரவேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.