கலைகிறதா மக்கள் நீதி மய்யம் கட்சி..! நிர்வாகிகள் குழப்பம்..!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகரும்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக இருப்பவர் கமல். தமிழ் சினிமாவின் உலகநாயகன் என் போற்றப்படும் இவர்,தனது 68-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.

இவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் கலந்து கொண்ட கமல்,சிறிது நேரம் கூட இல்லாமல் பேருக்கு தலையைக் காட்டிவிட்டு வேரொரு நிகழ்ச்சிக்கு போய்விட்டாராம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கட்சி அலுவலகத்துக்கு வந்த கமல், நிவாகிகளுடன் ஆலோசித்து பேசுவார் என கூறப்பட்ட நிலையில், இவ்வாறு சென்றது,காத்திருந்த கட்சி நிர்வாகிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.