Connect with us

Raj News Tamil

499 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகம்

499 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஒப்பந்த செவிலியர்களாகப் பணிபுரியும் 499 பேருக்கு நிரந்தர செவிலியர்களாகப் பணி வழங்கப்படவுள்ளது என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

செவிலியர்கள் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண முதல்வர் அறிவுறுத்தினார். அதன்படி, உடனடியாக துறையின்செயலாளர் போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர்களை அழைத்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தற்போது எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களை காலமுறை ஊதியத்தில் (நிரந்தரப் பணி)பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 499 பேருக்கு வாழ்வு கிடைக்கவிருக்கிறது.

கலைஞர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 300 செவிலியர் பணியிடங்களை புதியதாகத் தோற்றுவித்து அதிலும்தொகுப்பூதிய செவிலியர் காலிப்பணியிடங்களை தற்காலிக செவிலியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

யார் எப்போது போராட்டம்நடத்தினாலும் போராட்டம் நடத்தப்படுகின்ற இடத்துக்கு நேரிடையாகச் சென்று அவர்களுடைய போராட்டத்துக்கான காரணங்களைக் கேட்டு, அந்த போராட்டத்தை கனிவோடு இந்த அரசு பரிசீலனை செய்கிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

More in தமிழகம்

To Top