மத்திய அரசு உள்நாட்டில் வெங்காய விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு டிச. 8-ஆம் தேதி வெங்காய ஏற்றுமதித் தடையை விதித்தது.
ஏற்றுமதிக்கான தடை மார்ச் 31 வரை தொடரும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்த நிலையில், குறிப்பிட்ட 4 நாடு களுக்கு மட்டும் சிறப்பு அனுமதியில்
வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
இது தொடர்பாக நுகர்வோர் விவகா ரத் துறைச் செயலர் ரோஹித் குமார் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகை யில்,
‘வங்கதேசத்துக்கு 5,000 டன், மோரீ ஷஸுக்கு 1,200 டன், பஹ்ரைனுக்கு 3,000 டன், பூடானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்படு கிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
மார்ச் 31-ஆம் தேதி வரை இந்த ஏற்று மதிக்கு வர்த்தகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வெளியுறவு அமைச்சகம் அளித்த பரிந் துரையின் அடிப்படையில் இந்த அனு மதி வழங்கப்படுகிறது’ என்றார்.