வாகனங்கள், தனிநபர் கடனுக்கான வட்டி அதிகரிப்பு…!

வங்கிகளுக்கு அளிக்கும் வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் அரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது இருக்கும் ரெபோ ரேட் 4.9 வீதத்திலிருந்து 5.4 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், 2019-ஆண்டு இருந்த ரெபோ ரேட் 5.4 சதவீதம் தற்போது உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது கடந்த நிதியாண்டில் இருந்து ரெபோ ரேட் 3-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உயர்வால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெரும் வங்கிகளின் வட்டி விகிதம் உயர்த்தப்படும்,மேலும் இதன் காரணமாக வங்கிகளிடம் இருந்து கடன் பெரும் வாடிக்கையாளர்களின் வட்டி விகிதம் உயர்த்தப்படுகின்றன.

இதனால் வீடு,வாகனம்,கடைகள்,தொழில் மற்றும் தனிநபர் போன்ற கடனுக்கான வட்டி விகிதமும் உயரும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக பணவீக்கம் அதிகரித்துள்ளதாலும்,அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதலும்,வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியுள்ளார்.

மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கிகளின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.

வட்டி வீதம் தொடர்ந்து அதிகரிக்கப்படுவதால் நாட்டில் என்ன நடக்குதென்றே தெரியாமல் இருக்கும் அடித்தட்டு மக்களும்,பாமர மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.