கேரள மாநிலம் பாலக்காடுவை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மனைவி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி மேஜை மேல் வைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மேஜையில் வைத்த தங்கச் சங்கிலியைக் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் நகை கிடைக்கவில்லை. இந்நிலையில் தனது வீட்டில் வளர்ப்படும் நாய் அங்கும் இங்குமாக ஓடியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர் நாயை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளனர். அதில் காணாமல் போன நகை இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து நாயின் வயிற்றில் இருக்கும் நகையை எடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் குடும்பத்தினர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் மருந்து மூலம் நகை எடுக்கக் கேட்டுள்ளனர்.
பிறகு மருத்துவர் கொடுத்த மருந்தை நாய்க்கு கொடுத்து சுமார் 42 மணி நேரம் கழித்து நகை வெளியில் எடுத்துள்ளனர்.