வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏராளமானோர் மாநாட்டிற்கு வருகை தருவார்கள் என கூறப்படுவதால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும். மாநாட்டிற்கு வருவோரால் அதிக அளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.