இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் “எமர்ஜென்சி”. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிகை கங்கனா நடித்துள்ளார்.
இந்த படத்தை வரும் 6ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், பஞ்சாபைச் சேர்ந்த சிரோமணி அகாலிதளம் கட்சி சார்பில் தணிக்கைக் குழுவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதில், படம் வெளியானால் பஞ்சாபில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், கவனமாக தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.