ரவுடி கருக்கா வினோத் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை நுழைவுவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரவுடி கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மேலும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News