பணவீக்கம் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி, வெள்ளம் ஆகியவை பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக எரிசக்தி துறையின் கடன் சுமை பலமடங்கு உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு பாகிஸ்தான் மின்சார துறையின் கடன் ரூ.2.253 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.2.437 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அரசின் கைவசம் இருக்கும் அந்நியச் செலாவணி இருப்பு மிகவும் வேகமாகத் தீர்ந்து வருவதால் தற்போது இருக்கும் வெளிநாட்டுப் பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அரசு உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு அதிகாரிகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார்.