தமிழக சிறைகள் சீர்திருத்த பணிகள் துறை மூலம் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சிறைகள் சீர்திருத்த பணிகள் துறை உடன் இணைந்து கைதிகளுக்கு பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை துவக்கி அதில் அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பினை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இன்று மதுரை மத்திய சிறை அமைந்துள்ள வளாகத்தில் அமைந்துள்ள ஃப்ரீடம் பில்லிங் ஸ்டேஷன் (freedom filling station) சிறை எரிபொருள் விற்பனை நிலையத்தை தமிழக சட்டம் மற்றும் சிறைகள் சீர்திருத்த பணிகள் துறை அமைச்சர் ரகுபதி முதல் விற்பனையை துவங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து புதிய பெட்ரோல் விற்பனை நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது. அதற்காக மதுரை மத்திய சிறைச்சாலை அருகே துவக்க விழா பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே 35 பேர் முறையான பயிற்சி பெற்று உள்ளதை தொடர்ந்து அவர்கள் பணி அமர்த்தபட்டனர்.