Connect with us

Raj News Tamil

தீவிரவாதிகளிடம் சிக்கிய சபாத் ஹவுஸ் புகைப்படம் ! தாக்குதல் மீண்டும் நடக்குமா?

இந்தியா

தீவிரவாதிகளிடம் சிக்கிய சபாத் ஹவுஸ் புகைப்படம் ! தாக்குதல் மீண்டும் நடக்குமா?

புனேயில் பிடிபட்ட சந்தேகத்திக்கிடமான தீவிரவாதிகளிடமிருந்து மும்பையில் உள்ள யூத கலாச்சார மையமான சபாத் ஹவுஸின் இரண்டு கூகுள் படங்கள் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து , மும்பையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத எதிர்ப்பு படை(ஏடிஎஸ்) அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு புனேயைச் சர்ந்த முகமது யூனுஸ் கான் மற்றும் முகமது யூனுஸ் முகமது யாகூப் சகி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் விசாரித்ததில் ராஜஸ்தானில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரிய வந்தது.

அப்போது அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுடன் தொடர்புடைய சபாத் ஹவுஸின் கூகுள் படங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன.

கொலாபாவில் உள்ள சபாத் ஹவுஸ் 2008-ல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கான இலக்குகளில் ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் , காவல் துறையின் தெற்கு மண்டலம், சாபாத் ஹவுஸ் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், பாதுகாப்பு ஒத்திகையையும் நடத்தியுள்ளது. இதன் காரணமாக மும்பையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top