ரேஷன் கடைகளில் பிரதமரின் புகைப்படங்களை வைக்க முடியாது..!! – கேரள முதல்வர் அறிவிப்பு

கேரள மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கொண்ட அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இது குறித்து நேற்று கேரள சட்டப் பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: மத்திய அரசு எப்போதும் இல்லாத இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதமரின் புகைப்படம் கொண்ட விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை செயல்படுத்த முடியாது என்பதை மத்திய அரசிடம் தெரிவிப்போம்.

இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடமும் பேச முயற்சி எடுக்கப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News