ரோஜாக் கூட்டம், பூ, சிவப்பு மஞ்சள் பச்சை என்று பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சசி. இவரது இயக்கத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் உருவாகி, கடந்த 19-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆனது. சென்டிமென்ட், சமூக கருத்து, வித்தியாசமான திரைக்கதை என்று பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த படமும், ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றது.
இதனால், முதல் நாளில் இருந்தே படத்திற்கு நல்ல வசூல் இருந்து வந்தது.இந்நிலையில், இந்த படம் இதுவரை வசூலித்த மொத்த தொகை எவ்வளவு என்பது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ரூபாய் 33 கோடியை இந்த படம் வசூலித்துள்ளது. இன்னும் படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருப்பதால், வசூல் வேட்டை தொடரும் என்றே எதிபார்க்கப்படுகிறது.
இரண்டு பாகங்களும் வெற்றியை பெற்றுள்ளதால், கூடிய விரைவில் 3-ஆம் பாகம் எடுக்கப்படும் என்று விஜய் ஆண்டனி ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.