சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய புழல் ஏரிக்கரையின் ஓரங்களில் குப்பைகளும் இறந்த மாடு, பன்றி, நாய், கோழி இறைச்சியின் கழிவுகள் ஆகிய சடலங்களை ஏரி நீரில்வீசப்படுவதால் ஏரியின் தூய்மை தன்மை மாசுபடுகிறது.
மேலும் மாநகராட்சி தரப்பில் குப்பைகள் கொட்டுவதற்கான குப்பை தொட்டிகள் வைக்காமலும் இதனை தொடர்ந்து திருமுல்லைவாயல் சுற்றுப்பகுதியில் உள்ள கழிவுநீர் அனைத்தும் ஏரியில் கலப்பதால் நீரின் தன்னை மாசுபடுகிறது இந்த நீரையே சென்னை மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் மாநகராட்சி தரப்பில் கால்வாய் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இதுவரை செயல்படாமலே கால்வாய் நீர் அனைத்தும் ஏரியில் சேர்கிறது. எனவே ஆவடி மாநகராட்சி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் இணைந்து சுத்திகரிப்பு நிலையத்தையும் மற்றும் ஏரியின் சுற்றுப்புறங்களில் கொட்டக்கூடிய குப்பைகளால் அசுத்தமாவதையும் தடுத்து இந்த ஏரியை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக வைத்துள்ளனர்.