Connect with us

Raj News Tamil

Aircraft-ல் பறக்கும்போது.. திடீரென திறந்துக் கொண்ட பாதுகாப்பு கதவு.. சாதூர்யமாக செயல்பட்ட பெண் விமானி..

உலகம்

Aircraft-ல் பறக்கும்போது.. திடீரென திறந்துக் கொண்ட பாதுகாப்பு கதவு.. சாதூர்யமாக செயல்பட்ட பெண் விமானி..

டச்சு நாட்டை சேர்ந்தவர் நரைன் மெல்கும்ஜான். பெண் விமானியான இவர், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கிறார். இதுதொடர்பான தகவலையும், அதில் எப்படி மீண்டு வந்தார் என்பதையும், தற்போதைய பதிவு ஒன்றில் அவர் கூறியிருக்கிறார்.

அதாவது, தன்னுடைய இரண்டாவது ஏரோபேட்டிக் பயிற்சிக்காக, Extra 330LX என்ற ஏர்கிரஃப்ட்டை எடுத்து சென்றுள்ளார். அப்போது, Canopy என்று அழைக்கப்படும், ஏர்கிராஃப்டின் பாதுகாப்பு கதவை, அவர் சரியாக மூடாமல் இருந்துள்ளார்.

இதனால், பாதி வழியில் பறந்துக் கொண்டிருக்கும்போது, அந்த கதவு திடீரென திறந்துக் கொண்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், நிதானத்தை இழக்காமல், சாதூர்யமாக செயல்பட்டு, விமானத்தை தரையிறக்கினார்.

இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள மெல்கும்ஜான், தனது அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

“கோவிட் தொற்றில் இருந்து மீண்டதையடுத்து, பயிற்சி முகாமிற்கு சென்று, நானும் தவறு செய்தேன். கண் பாதுகாப்பு கவசம் எதையும் அணியாமல் பறந்தது, நிலைமையை இன்னும் சவாலானதாக மாற்றியது” என்று கூறினார்.

மேலும், “என்னுடைய பார்வை சரி ஆவதற்கு, 28 மணி நேரம் ஆனது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

“நீங்கள் ஒரு விமானியாக இருந்தால், இந்த வீடியோவை பாருங்கள். இது எச்சரிக்கையை ஏற்படுத்தும் கதை என்றும், என்னுடைய தவறுகளில் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம் என்றும், நான் நம்புகிறேன்” என அவர் தனது பதிவில் கூறியிருக்கிறார்.

More in உலகம்

To Top