பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிங்க் வாக்குச்சாவடி மையம் சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிக்கு தலா ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
மகளிரைக் கவரும் வகையில், இளஞ்சிவப்பு (pink booth) நிற வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் அனைவரும் இளஞ்சிவப்பு நிற வண்ண உடைகளை அணிந்து பங்கேற்க உள்ளனர்.
இவற்றில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், போலீசாரும் பெண்களாகவே நியமிக்கப்படுகின்றனர். இங்கு கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள் மற்றும் மூத்த பெண்களுக்கு, தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை வெயிலில், பெண்களால் நீண்ட நேரம் வரிசையில் நிற்க முடியாது என்பதால், இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தலில், பெண்களுக்கு அதிகார பகிர்வை உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.