கடந்த 2014-ஆம் ஆண்டு அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிசாசு. இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம், சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகும், சில பிரச்சனைகளின் காரணமாக, படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால், பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், அது மாறிக் கொண்டே சென்றது. இந்நிலையில், பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் மார்ச் மாதம், இப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாம்.