Connect with us

Raj News Tamil

“உறவுக்கார பெண் பாலியல் வன்கொடுமை தந்தார்” – விக்ரம் பட நடிகர் பகீர் தகவல்!

இந்தியா

“உறவுக்கார பெண் பாலியல் வன்கொடுமை தந்தார்” – விக்ரம் பட நடிகர் பகீர் தகவல்!

மணிரத்னம் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் பியூஸ் மிஸ்ரா. இந்த படத்தையடுத்து, விக்ரம் நடிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான சாமுராய் உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து வந்தார்.

நடிப்பது மட்டுமின்றி, பாடல் பாடுவது, கதை, திரைக்கதை எழுதுவது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வம் உள்ள இவர், தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தான் 7-ஆம் வகுப்பு படிக்கும்போது, உறவுக்கார பெண் மூலம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உடலுறவு என்பது ஆரோக்யமான விஷயம். நமது முதல் செக்ஸ் அனுபவம் கசப்பானதாக மாறிவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும் என்றும் அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் என்று கூறியுள்ள தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top