மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிறுநீர் பைக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் ஜமுய் மாவட்டத்தில் சதார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வந்த நோயாளி ஒருவருக்கு அங்குள்ள ஊழியர்களிடம் சிறுநீர் பை பொருத்தும்படி மருத்துவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையாக இருந்ததால் சிறுநீர் பைக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டிலை நோயாளிக்கு பொருத்தினர்.
இது தொடர்பாக நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை பொறுப்பாளர்களிடம் கேட்ட போது அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. இதனையடுத்து, மறுநாள் காலையில் நோயாளிக்கு தேவையான உபகரணம் மற்றும் சிறுநீர் பைக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டுவரப்பட்டன.
மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் நோயாளிக்கு சிறுநீர் பைக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில் பொருத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.