Connect with us

Raj News Tamil

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி; முழு விவரம்!

தமிழகம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி; முழு விவரம்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 7,60,606 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். 4,08,440 மாணவியர்களும், 3,52,162 மாணவர்களும், 1 மூன்றாம் பாலினத்தவரும் அடக்கும்.

இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

தேர்ச்சி விவரங்கள்

தேர்ச்சி பெற்றவர்கள் 7,19,196 (94.56%)
மாணவியர் 3,93,890 (96.44%) தேர்ச்சி.
மாணவர்கள் 3,25,305 (92.37%) தேர்ச்சி.
மூன்றாம் பாலினத்தவர் 1 (100%) தேர்ச்சி.
மாணவர்களை விட 4.07 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்

அரசுப் பள்ளிகள் 91.02%
அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.70%
இருபாலர் பள்ளிகள் 94.78%
பெண்கள் பள்ளிகள் 96.39%
ஆண்கள் பள்ளிகள் 88.98%

பாடப் பிரிவுகள் வரியான தேர்ச்சி சதவிகிதம்

அறிவியல் பாடப் பிரிவுகள் 96.35%
வணிகவியல் பாடப் பிரிவுகள் 92.46%
கலைப் பிரிவுகள் 85.67%
தொழிற்பாடப் பிரிவுகள் 85.85%

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம்

இயற்பியல் 98.48%
வேதியியல் 99.14%
உயிரியல் 99.35%
கணிதம் 98.57%
தாவரவியல் 98.86%
விலங்கியல் 99.04%
கணினி அறிவியல் 99.80%
வணிகவியல் 97.77%
கணக்குப் பதிவியல் 96.61%

ஏதேனும் ஒரு பாடத்தில் 26,352 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழ் 35
ஆங்கிலம் 7
இயற்பியல் 633
வேதியியல் 471
உயிரியல் 652
கணிதம் 2587
தாவரவியல் 90
விலங்கியல் 382
கணினி அறிவியல் 6996
வணிகவியல் 6142
கணக்குப் பதிவியல் 1647
பொருளியல் 3299
கணினிப் பயன்பாடுகள் 2251
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 210

5,603 மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் 5,161 (92.11%) பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்வெழுதிய 125 சிறைவாசிகளில் 115 (92%) பேர் தேர்ச்சி பெற்றனர்.

www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணைய தளங்கள் வாயிலாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top