Connect with us

Raj News Tamil

“திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை அரசியலை உத்தரபிரதேசத்தில் பிரதிபலிக்கும் காங்கிரஸ்” – மோடி விமர்சனம்

இந்தியா

“திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை அரசியலை உத்தரபிரதேசத்தில் பிரதிபலிக்கும் காங்கிரஸ்” – மோடி விமர்சனம்

உத்தரபிரதேச மாநிலம் பாதோஹி பகுதியில், பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பாஜக வேட்பாளர் வினோத் குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“பாதோஹி தொகுதியில், சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும், தங்களது டெபாசிட்டை பெறுவது மிகவும் கஷ்டமான விஷயம். எனவே, அவர்கள் அரசியல் பரிசோதனைகளை இங்கு செய்து வருகின்றனர்.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வங்காள அரசியலை, அவர்கள் இங்கே செய்ய நினைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சமாதானப்படுத்தும் விஷ அம்புகள் தான், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அரசியல்.

மனிஷ் சுக்லா போன்ற பல பாஜக தலைவர்கள், அங்கு கொல்லப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி கட்சி தற்போது அந்த அரசியலை உத்தரபிரதேசத்தில் செய்ய நினைக்கிறது” என்று கூறினார்.

தொடர்ந்து, “வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நான் உறுதிமொழி அளிக்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக புர்வாஞ்சல் பகுதி இருக்கும்.

மேலும், இந்த ஒட்டுமொத்த பகுதியும், சுகாதாரம் மற்றும் கல்வியின் வலிமையான மையமாக மாறி வருகிறது.

வரும் 5 ஆண்டுகளில், புர்வாஞ்சல் பகுதியின் ஒட்டுமொத்த உருவம் மற்றும் தலைவிதியை, நானும்-யோகியும் இணைந்து மாற்றப் போகிறோம்” என்று கூறினார்.

பாதோஹி பகுதியில், 6-ஆம் கட்டமாக, வரும் மே 25-ஆம் தேதி அன்று, வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும், வரும் ஜூன் 4-ஆம் தேதி அன்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

More in இந்தியா

To Top