ஆங்கில புத்தாண்டு.. பிரதமர், குடியரசு தலைவர் வாழ்த்து..

2024-ஆம் ஆண்டு முடிவடைந்து, 2025-ஆம் ஆண்டு இன்று முதல் ஆரம்பம் ஆகியுள்ளது. இந்த புது வருட பிறப்பையொட்டி, பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில், “இந்த வருடம், புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும், அனைவருக்கும் கொண்டு வரட்டும். அனைவரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கட்டும்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோல், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 2025-ஆம் ஆண்டு, அனைவருக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுக்கட்டும்.

இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒரு பிரகாசமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News