Connect with us

Raj News Tamil

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: “Go Back Modi” சமூக வலைதளங்களில் வைரல்!

Trending

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: “Go Back Modi” சமூக வலைதளங்களில் வைரல்!

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு வந்தடைந்தார். பின்னர், பிரத்யேக வழியில் பாதுகாப்பு வாகனங்களுடன் கார் மூலம் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு முறையும் #GobackModi போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆவது வழக்கம்.

இந்த முறையும் பிரதமர் மோடி வருகையொட்டி இன்று காலை முதல் #GobackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது.

இதற்குப் போட்டியாக #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் ஆகி வருகிறது.

More in Trending

To Top