இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமாக இருந்து வருவது இஸ்ரோ. இதன் தலைவரான எஸ்.சோம்நாத், பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், பிரதமரை விண்வெளிக்கு அனுப்புவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த சோம்நாத், “பிரதமரை விண்வெளிக்கு நம்பிக்கையுடன் அனுப்புவதற்கான திறன் எங்களிடம் இருந்தால், நாங்கள் அனைவரும் மிகவும் பெருமைப்படுவோம்” என்று தெரிவித்தார்.
மேலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் மிஷன் நடைமுறைக்கு வரும்போது, பிரதமர் நரேந்திர மோடி வானில் பறக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.