குஜராத் சட்டப்பேரவை தேர்தல் : பிரதமர் மோடி வாக்களித்தார்

குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 89 தொகுதிகளில், 63% வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து வதோதரா, காந்தி நகர், அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் 93 தொகுதிகளில் 2வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

36,000க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன், 26,409 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.1,13,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவரது தொகுதியான சபர்மதி பகுதியில் உள்ள ரானிப் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.