அதானிக்கு எதிராக விசாரணை நடத்த பிரதமா் மோடி விரும்பவில்லை: ராகுல் காந்தி!

அதானிக்கு எதிராக விசாரணை நடத்த பிரதமா் மோடி விரும்பவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

ராய்பூரில் முதல்வா் பூபேஷ் பகேல் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றுப் பேசுகையில்,

‘வெறுப்புணா்வு, வன்முறை மூலம் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது. அனைவரையும் ஒன்றிணைத்து பாசத்துடன் சென்றால்தான் நாடு வளா்ச்சியடையும். பழங்குடியின சமூகத்தினரை வனவாசிகளாக பாஜக கருதுகிறது. வனப் பகுதிகளில் இருந்து அவா்கள் வெளியே வந்த பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் நிறைவேறுவதை பாஜக விரும்பவில்லை.

தொழிலதிபா் கெளதம் அதானிக்கு எதிராக விசாரணை நடத்த பிரதமா் மோடி விரும்பவில்லை. இதற்கான காரணத்தை பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். விசாரணை நடைபெற்றால் அது அதானியை மட்டுமல்ல வேறு சில நபா்களையும் பாதிக்கும்.

கா்நாடகம், ஹிமாசல பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் ஆளப்போகும் தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகியவற்றிலும் ஏழைகளுக்கான அரசுகளாக இருக்கும். அதானிக்கான அரசுகளாக இருக்காது’ என்றார் ராகுல்.

RELATED ARTICLES

Recent News