தரம் உயர்த்தப்பட்ட ரயில்வே பாதை.. இலங்கையில் துவக்கி வைத்த பிரதமர் மோடி..

அரசு முறை பயணமாக, இலங்கை நாட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர், இன்று இலங்கை பிரதமர் அனுர குமார திசநாயக்கவுடன், அனுராதாபுர பகுதிக்கு சென்றுள்ளார்.

மேலும், அப்பகுதியில் உள்ள மாஹோ – ஓமந்தை பகுதியில் மேம்படுத்தப்பட்ட ரயில்வே பாதையையும், அவர் துவக்கி வைத்தார்.

இதுமட்டுமின்றி, அதே ரயில் நிலையத்தில், உயர் ரக தொலைத்தொடர்பு அமைப்பையும் அவர், துவக்கி வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இலங்கையின் வளர்ச்சி பயணத்தில், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கு, இந்தியா பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News