வாக்கு செலுத்தும் ஈ.வி.எம் மெஷினின் நம்பகத்தன்மையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 100 சதவீதம் ஈ.வி.எம். மெஷினில் பிரச்சனை இல்லை என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் தாவணகெரே என்ற பகுதியில், பாஜகவின் சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தொண்டர்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “EVM மெஷின் தொடர்பான வழக்கில், தன்னுடைய தீர்ப்பின் மூலமாக, காங்கிரஸ் கட்சியின் முகத்தில், பலமான அறையை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது” என்று கூறினார்.
மேலும், காங்கிரஸ் கட்சி இனிமேல் தேர்தலில் தோல்வி அடைந்தால், EVM மெஷின் பிரச்சனையால் தான் தோல்வி அடைந்தோம் என்று சாக்குபோக்குகளை கூற முடியாது என்றும் பிரதமர் விமர்சித்தார்.
தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த பிரதமர் மோடி, “இரண்டாம் கட்டமாக, கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி கர்நாடகாவில் நடந்த தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சி அச்சத்தில் உள்ளது” என்றும் அவர் விமர்சித்தார்.