Connect with us

Raj News Tamil

“கடந்த 10 ஆண்டுகளில் எண்ணிப் பார்க்க முடியாத சாதனைகள்” – உபியில் பிரதமர் மோடி பேச்சு

தேர்தல் 2024

“கடந்த 10 ஆண்டுகளில் எண்ணிப் பார்க்க முடியாத சாதனைகள்” – உபியில் பிரதமர் மோடி பேச்சு

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது : 2014, 2019 ல் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை மீரட் நகரில் இருந்து துவக்கினேன். 2024லும் முதல் பிரசாரத்தை மீரட் நகரில் இருந்து தான் துவக்குகிறேன்.

ந்த தேர்தல் ஆட்சி அமைப்பதற்கு மட்டும் அல்ல. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றவும், உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்குமான தேர்தல். தற்போது வரை வளர்ச்சிக்கான டிரைலரை மட்டும் பார்த்துள்ளீர்கள். நாட்டை இன்னும் முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வோம். கடந்த 10 ஆண்டுகளில் எண்ணிப் பார்க்க முடியாத சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளது.

3வது முறை ஆட்சி அமைக்க பாஜக அரசு தயாராக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி உள்ளோம். அடுத்த ஆட்சியில் முதல் 100 நாட்களில் மிகப்பெரிய கொள்கைகளுக்காக பணியாற்றுகிறோம்.

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்ன தடை வந்தாலும் அதனை நிறுத்த மாட்டேன். ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து ‛ இண்டியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளனர். அக்கூட்டணியை கண்டு பயப்பட மாட்டேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

More in தேர்தல் 2024

To Top