டெல்லியில், கடந்த 10-ஆண்டுகளாக, ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது, அதிஷி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கான ஆட்சிக்காலம், இந்த ஆண்டோடு முடிவடைய இருப்பதால், விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையமும் விரைவில் வெளியிட உள்ளது. இவ்வாறு இருக்க, டெல்லியில் உள்ள ரோகிணி என்ற பகுதியில், பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “டெல்லியில் செயல்படுத்தி வரும் பல நலத்திட்டங்களை பா.ஜ.க. அரசு நிறுத்திவிடும் என்ற அச்சத்தை ஆம் ஆத்மி அரசு பரப்புகிறது. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நலத்திட்டமும் நிறுத்தப்படாது” என்று தெரிவித்தார்.
மேலும், ஆம் ஆத்மி அரசாங்கத்தால் நிறுத்தப்பட்ட மத்திய அரசின் திட்டங்களும் செயல்படுத்தப்படும்” என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய பிரதமர், “டெல்லி மக்களின் இதயத்தை வெல்வதற்கும், பேரழிவிலிருந்து விடுபடுவதற்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு” என்று தெரிவித்தார்.