Connect with us

Raj News Tamil

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : அமைதியையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய பிரதமர் மோடி!

இந்தியா

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : அமைதியையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய பிரதமர் மோடி!

இஸ்ரேல் நாட்டிற்கும், ஹமாஸ் என்ற தீவிரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில், 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று டெல்லியில் P20 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“இந்தியா விண்கலத்தையும் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. மேலும், ஜி20 உச்சி மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளது.

இப்போது, P20 உச்சி மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் சக்தியை கொண்டாடும் தளம் தான், இந்த P20 உச்சி மாநாடு.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ இந்த P20 உச்சி மாநாட்டை நடத்துவதை, நாங்கள் பெரும் சலுகையாக நினைக்கிறோம். இந்தியா தான் ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் உள்ளது.

நாடாளுமன்றங்களும், சட்டப் பேரவைகளும், கலந்துரையாடுவதற்கும், விவாதங்கள் நடத்துவதற்கும் முக்கியமான இடங்களாக உள்ளன” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அனைத்து வகையான வன்முறையும், மனித்துவத்திற்கு எதிரானது தான்.

இது அமைதியையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் நேரம் இது. அப்போது தான், நாம் அனைவரும் ஒன்றாக வளர முடியும்” என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத் தலைவர் டுவார்டே பச்சக்கோ உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “அமைதியை நிலைநாட்டாமல், நிலையான வளர்ச்சி என்ற இலக்கை பற்றி பேச முடியாது.

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட, உலகில் உள்ள அனைத்து கண்டங்களிலும், அமைதியை நாம் நிலைநிறுத்த வேண்டும்.” என்று கூறினார்.

இந்த P20 மாநாட்டில், ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் கலந்துக் கொண்டன. ஆனால், இந்தியாவுக்கும், கனடாவுக்கும் உள்ள பிரச்சனை காரணமாக, கனடா மட்டும் இந்த உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ளவில்லை.

More in இந்தியா

To Top